கனடா நாட்டில் உள்ளூர் ஐஸ் ஹாக்கி போட்டியில் விளையாடுவதற்காக ஜுனியர் அணி வீரர்கள் நேற்று முன்தினம் பேருந்தில் சென்றனர். சாஸ்கட்சேவான் மாகாணத்தின் திஸ்டேல் நகருக்கு அருகில் சென்றபோது எதிரே வந்த டிரக்குடன் மோதியது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
பேருந்து விபத்தில் சிக்கி ஐஸ் ஹாக்கி வீரர்கள் 15 பேர் பலியானதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விபத்தில் பலியான ஐஸ் ஹாக்கி வீரர்களின் அஞ்சலி நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடாவ் மற்றும் முன்னாள் ஹாக்கி வீரர்கள் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், விபத்தில் பலியான ஐஸ் ஹாக்கி வீரர்களுக்கு பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், ஹாக்கி வீரர்களுக்கு நடக்கவுள்ள அஞ்சலி நிகழ்ச்சியில் பிரதமர் ஜஸ்டின் ட்ருடாவ் மற்றும் முன்னாள் ஹாக்கி வீரர்கள் பலர் கலந்து கொள்கின்றனர் என தெரிவித்துள்ளனர்.