பிரபல நடிகர் ஆர்யா ஒரு பிரபல தொலைக்காட்சியில் திருமணத்திற்காக பெண் தேடுகிறார். இவருக்காக 16 பெண்கள் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். இந்த பெண்கள் ஆர்யாவை காதல் செய்வது போலும், ஆர்யாவின் அன்பிற்கு சண்டை போடுவது போலவும் இந்த நிகழ்ச்சியில் காண்பிக்கிறார்கள். அதிலிருந்த சில பெண்களை எலிமினேட் செய்து வருகிறார். தற்போது அகாதா, அபர்ணதி, சுசானா, சீதாலட்சுமி, சுவேதா என 6 பெண்கள் மட்டும் தான் இருக்கிறார்கள்.
இந்த 6 பெண்களில் மக்களுக்கு மிகவும் பிடித்த பெண்ணாக இருப்பது அபர்ணதி தான். இவர் உண்மையாக நிகழ்ச்சியில் நடந்துகொள்கிறார் என்றே இவருக்கு பல ரசிகர்கள் உண்டு. இவர் ஒரு குறும்படம் மற்றும் ஒரு படத்திலும் நடித்துள்ளார். இவர் நடித்த குறும்படம் மட்டும் தான் வெளியாகியுள்ளது. இவர் நடித்த படம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் படத்தின் சிங்கிள் ட்ராக் மட்டும் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், சில யூ டியூப் சேனல்கள் அபர்ணதி அடுத்து விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என்று பேசி வருகிறார்கள். ஆனால் இது உண்மை இல்லை என்று கேட்கும்போதே தெரிகிறது. இவ்வாறான வதந்திகளை கேட்ட விஜய் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள். இப்படி ஒரு செய்தி பரவி வருகிறது என்பதை உறுதி படுத்தும் விதமாக அதன் வீடியோவை கீழே இணைத்துளேன்.