தமிழகத்தில் பல அரசியல்வாதிகள் இருந்தாலும், சிலரை நம்மால் மறக்க முடியாது, அப்படி ஒருவர் தான் தமிழிசை. ஆம் தமிழ் நாட்டில் BJP-யின் தலைவராக இருப்பவர் தான் தமிழிசை. இவர் எவ்வளவு உறுதியாக, இறுக்கமாக பேசினாலும் பலரும் இவரை கிண்டல் செய்வார்கள். இவர் மருத்துவத்திற்கு படித்தவர் என்பதை அவ்வப்போது பேசும்போது கூறுவார்.
இவரை கிண்டல் செய்து பல MEMS-கள் வரும். இவரின் சில பேட்டிகள் கூட மிகுந்த நகைச்சுவையாக இருக்கும். இவருக்கும் இவ்வாறு இவரை வைத்து பலர் சிரிப்பது பிடிக்கும் என்றே கூறியுள்ளார். இந்த நிலையில் இவர் மருத்துவம் படிக்கும்போது ரஜினியின் தீவிர ரசிகையாக இருந்திருக்கிறார்.
அப்போது ரஜினியை வெறித்தனமாக காதல் செய்ததாகவும், இன்றும் தான் ரஜினியை காதலிப்பதாகவும் கூறிஉள்ளார். இது பலரும் இவரை கிண்டல் செய்ய காரணமாக அமைந்துள்ளது. இதை கிண்டல் செய்யும் விதத்தில் நிறைய MEMS வந்துகொண்டே தான் இருக்கிறது.