புங்குடுதீவு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஏழு தீவுகளில் ஒரு தீவு ஆகும்.
யாழ். நகரில் இருந்து செல்லும் 18 மைல் நீளமுள்ள பெருஞ்சாலையின் மூலம் இத்தீவு யாழ். நகருடன் இணைக்கப்பட்டுள்ளது.
குடாக்கள், முனைகள் என்பன அமையப்பெற்ற இத்தீவின் சுற்றளவு 21 மைல்கள் ஆகும். இது கிழக்கு மேற்காக 5.5 மைல் நீளமும், வடக்கு தெற்காக 3 மைல் அகலமும் கொண்டு தோற்றமளிக்கின்றது.
யுத்தம் நடைப்பெற்ற காலப்பகுதியில் யாழ் உட்பட பல பகுதியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து சென்றனர். புங்குடுதீவில் இருந்தும் மக்கள் இடம் பெயர்ந்து சென்றனர்.
தற்போது, யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கடந்து விட்டன. எனினும், புங்குடுதீவில் ஏற்பட்ட தாக்கமும், மாற்றமும் பாரியது. தற்போதைய நிலை குறித்து காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.