விடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் குணாளன் மாஸ்டர் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று சுவிஸ் நாட்டில் நடைபெற்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளராக செயற்பட்ட குணாளன் மாஸ்டர் என அழைக்கப்படும் ஜெ.மூர்த்தி கடந்த 29 ஆம் திகதி சுவிட்ஸர்லாந்தில் காலமானார்.
தென்மராட்சி சாவகச்சேரியை சேர்ந்த குணாளன் மாஸ்டர், சாவகச்சேரி இந்துகல்லூரியில் கல்வி பயின்று பின்னர் 1979 இல் சென்னையில் உள்ள தொழிநுட்ப கல்லூரியில் கல்வி கற்றிருந்தார்.
சாவகச்சேரியில் உள்ள ரெலிகோணரில் பணிசெய்திருந்த காலத்தில் பொன்னம்மான் மற்றும் கேடில்ஸ் ஆகியோர்களது நட்புடன் ஆரம்பமாகிய இவரது பயணம்.
மிகச்சிறந்த தொழில்நுட்பவியலாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்வர்.
வீடியோ படப்பிடிப்பாளர்களில் இவரும் ஒருவர். குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் இறுதிநாள் வீடியோ பதிவினை குணாளன் மாஸ்டர் தான் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவரது இறுதி வணக்க நிகழ்வு இன்று சுவிஸ் நாட்டில் நடைபெற்றது. இதில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.