வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கஞ்சாப் பொதியுடன் இளைஞன் ஒருவரை நேற்று இரவு பொலிஸாா் கைது செய்துள்ளனா்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்……..
நேற்று (09.04.2018) இரவு 11.55 மணியளவில் கிளிநொச்சியில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த பேருந்து ஒன்றை வவுனியா புதிய பேருந்து நிலைய பகுதியில் வைத்து சோதனை மேற்கொண்ட போது பொலிசார் நபர் ஒருவரிடம் இருந்து 4 கிலோ 25 கிராம் கஞ்சாப் பொதி ஒன்றினை மீட்டுள்ளனர்.
இந்நிலையில் செல்வபுரம் மல்லாவியை சேர்ந்த 33 வயதான செல்வரட்ணம் சிவதர்சன் என்பவரையே பொலிசார் கைது செய்துள்ளனர்.
இவரிற்கு எவ்வாறு கஞ்சா கிடைக்கப்பெற்றது தொடா்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் இன்றையதினம்(10-04-2018) நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.