இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடர் மற்றும் மே.தீவுகளுக்கான தொடரில் விளையாடுவாரா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அவரது முதுகுப்பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவர் ஓய்விலிருக்க வேண்டிய கட்டயாம் ஏற்பட்டுள்ளதாக கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் கிரஹாம் லெப்ரோய் தெரிவித்துள்ளார்.
குறித்த உபாதை காரணமாக ஐ.பி.எல். தொடரின் முதல் மூன்று வாரங்களுக்கு சமீரவுக்கு விளையாட உறுதியாக வாய்ப்பில்லையெனவும், அதற்கு பின்னர் அவர் உபாதையிலிருந்து குணமாகினால் ஐ.பி.எல். தொடரில் அவர் விளையாடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உபாதையிலுள்ள சமீர, இலங்கையில் நடைபெற்று வரும் மாகணங்களுக்கிடையிலான உள்ளூர் போட்டிகளிலும் விளையாடவில்லை.
இதேவேளை இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான செஹான் மதுசங்க மற்றும் நுவான் பிரதீப் ஆகியோரும் உபாதைக்கு முகங்கொடுத்துள்ளதால், ஜுன் மாதம் மே.தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள தொடரில் இலங்கை அணி முதற்தர வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் தொடரில் கலந்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் எனவும் சந்தேககிக்கப்படுகிறது.