போன ஆண்டு தமிழக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் பங்கு கொண்டு ஒரே வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டார்கள். அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைத்து பிரபலங்களின் உண்மை முகமும் மக்களுக்கு தெரியவந்தது. அதில் நடிகை ஓவியா புகழின் உச்சிக்கே சென்றார். மேலும் ஜூலி மற்றும் காயத்திரி மக்களால் மிகவும் இகழப்பட்டார்கள்.
இதில் ஒருவர் தான் கணேஷ் வெங்கட்ராமன், இவர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அந்த வகையில், இவரது மனைவி மேல் இவர் வைத்திருக்கும் காதலும் கூட நல்ல வரவேற்பிற்குரியதாக மக்கள் மத்தியில் அமைந்தது. இவர்களின் புகைப்படங்கள் கூட அவ்வப்போது ரசிகர்களால் அதிக அளவில் பகிரப்படும்
.இந்த நிலையில், இவர்கள் இருவரும் விடுமுறையை கொண்டாட ஸ்ரீலங்கா சென்றுள்ளார்கள். இவர்கள் இருவரும் மீன்கள் தொட்டியில் உட்கார்ந்து விளையாடும் ஒரு புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளனர். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.