உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர், கௌசல்யா என்ற வேற்று சாதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட காரணத்தினால், கௌசல்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களால் சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
சங்கர் கொலை வழக்கானது, திருப்பூர் வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது, சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பு கடந்த ஆண்டு, மார்கழி மாதம், 12-ம் திகதி வெளியிடப்பட்டது.
கௌசல்யாவின் தந்தை உள்ளிட்ட 5 பேருக்கு தூக்கு தண்டனையும், 9 வது குற்றவாளியான ஸ்டீபன் தன்ராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 11 வது குற்றவாளியான மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடியான தீர்ப்பினை வழங்கியது நீதிமன்றம். மேலும், கௌசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன்னா ஆகியோரை விடுதலை செய்தது நீதிமன்றம்.
இச் சம்பவம் தமிழகம் மட்டுமின்றி உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவங்களுக்குப் பிறகு பல பிரபலங்களால் பாராட்டுப் பெற்றும் ஒட்டுமொத்த உலகத்திற்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர் கௌசல்யா.
இந்நிலையில் இவர் இன்று யாழ். பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்துள்ளதுடன். பல்கலைக்கழக மாணவர்கள் சிலருடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டுள்ளார்.இவரின் வருகை குறித்த காரணங்கள் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.