ஜிமிக்கி கம்மல் புகழ் ஷெரிலுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவுள்ளது.கடந்த வருடம் தமிழ் இளைஞர்கள் முணுமுணுத்த பாடல் தான் ஜிமிக்கி அதற்கு காரணம் ஷெரில் என்ற மலையாள கல்லூரி ஆசிரியை.
மோகன் லால் நடித்த படத்தின் ஒரு பாடல் தான் ஜிமிக்கி கம்மல். கடந்த வருடம் ஓணம் பண்டிகையின் போது ஒரு கல்லூரியில் சில பெண்கள் இணைந்து நடனம் ஆடினார்கள். அதில் நடுவில் ஆடிய ஷெரில் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
மேலும், இவர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வரும் சொடக்கு பாடலுக்கும் நடனம் ஆடி அந்த வீடியோவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
(கணவர் இவர் தானாம்)
இந்த நிலையில், தற்போது ஷெரில் திருமணத்திற்கு தயாராகி வருகிறாராம். திருமணத்திற்கான நிச்சயமும் முடிந்துவிட்டதாம்.
திருமணத்திற்காக 5 மாதங்கள் முன்பே வேலையை விட்டுவிட்டாராம் ஷெரில்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பாரா இல்லை கணவருக்கு உதவியாக வீட்டிலேயே இருந்துவிடுவாரா என்று தெரியவில்லை.
இவருக்கு பல மொழிகளிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோதும் எதிலும் சரியான ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.