இன்று அல்லது நாளை பூமியின் மீது விழலாம் என்று எதிர்பார்க்கப்படும், சீனாவின் Tiangong-1 விண்வெளி நிலையத்தினால் இலங்கைக்கு ஆபத்து இல்லை என்று ஆர்தர் சி கிளார்க் நிலையம் தெரிவித்துள்ளது.
விண்வெளியில் செயலிழந்த சீனாவின் Tiangong-1 விண்வெளி நிலையம் இன்று பூமியின் வளிமண்டலத்துக்குள் இன்று அல்லது நாளை நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்போது, தீப்பிடித்து எரிந்து துகள்களாக பூமியில் விழும் என்றும் கூறப்படுகிறது.
இதன் சிதைவுகள், எங்கு விழும் என்று சரியாக கணிக்கப்பட முடியாவிடினும், நியூசிலாந்து மற்றும் அமெரிக்கன் மிட்வெஸ்ட் பகுதிக்கு மேலாக விழுவதற்கு சாத்தியங்கள் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த சிதைவுகளால் இலங்கைக்கு ஆபத்து இல்லை என்று இலங்கையில் உள்ள ஆர்தர் சி கிளார் நிலையம் தெரிவித்துள்ளது.