மேஷம்
உங்கள் மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனையால் நன்மை கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சிக்காக அக்கறையுடன் பாடுபடுவீர்கள். பெண்களுக்கு வீட்டுச்செலவுக்கு தேவையான பணம் கிடைக்கும். வீடு, வாகன வகையில் பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றவும்
ரிஷபம்
மதிநுட்பத்துடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு திட்டமிட்டபடி நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். அரசு சார்ந்த உதவி பெற அனுகூலம் உண்டு. பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். மாணவர்கள் கண்ணும் கருத்துமாக படிப்பர்.
மிதுனம்
எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள். நண்பர்களிடம் அளவுடன் பேசுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருக்கும் இடையூறுகள் சரியாகும். அளவான வருமானம் இருக்கும். சிகிச்சைகளால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
கடகம்
மதிநுட்பத்துடன் செயலாற்றுவீர்கள். தொழிலில் முன்னேற்றம் காணப்படும். நிலுவைப்பணம் வந்து சேரும். இல்லத்தரசிகளின் செயலால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுப நிகழ்வுகளில் பங்கு பெறுவீர்கள்.
சிம்மம்
பிறர் சொல்லும் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம். தொழிலில் உழைப்பிற்கு ஏற்ற உயர்வு கிடைக்கும். பணத்தேவை அதிகரிக்கும். உணவு நடைமுறையில் கவனம் வேண்டும். அரசு உதவி கிடைப்பதில் தாமதமாகும்.
கன்னி
எல்லோரது நல்லெண்ணத்தையும் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். பெண்கள் விரும்பிய பொருள் வந்து சேரும். வழக்கு விவகாரத்தில் அனுகூலம் ஏற்படும்.
துலாம்
நீண்டநாள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். தாராள பணவரவு கிடைக்கும். அலுவலகத்தில் பாராட்டு பெறுவீர்கள். எளியவர்களுக்கு உதவி செய்வீர்கள்.
விருச்சிகம்
முக்கிய செயல் தாமதாகும். உறவினர்களிடம் இதமாக நடந்து கொள்ள வேண்டும். தொழில் வியாபாரம் செழிக்க புதிய திட்டம் வகுப்பீர்கள். வருமானம் சீராக இருக்கும். வாகன பயணத்தில் கவனமாக இருக்கவும்.
தனுசு
பிறரது வேலைகளில் தலையிட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் வருமானம் சராசரி அளவில் இருக்கும். தியானம், தெய்வ வழிபாடு மன அமைதிக்கு உதவும். மாணவர்கள் சிறந்த தேர்ச்சி பெறுவர். உறவினரால் உதவி கிடைக்கும்.
மகரம்
உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். சேமிக்கும் விதத்தில் லாபம் வரும். பெண்கள் விரும்பிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு திருப்திகரமாக நிறைவேறும்.
கும்பம்
செயல்பாடுகளில் உற்சாகம் மிகுந்திருக்கும். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் செழிக்கும். சேமிப்பு அதிகரிக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேறும். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.
மீனம்