சற்று முன்னர் சிரிய நாட்டு வான் பரப்பில் அத்துமீறி, பிரித்தானிய போர் விமானங்கள் பறந்துள்ளது. சைப்பிரஸ் நாட்டில் உள்ள அமெரிக்க மற்றும் பிரித்தானிய கூட்டு படை தளத்தில் இருந்து புறப்பட்ட பிரித்தானிய போர் விமானங்கள் சிரிய எல்லைக்குள் சென்று பெரும் பீதியைக் கிளப்பி பின்னர் தமது தளத்திற்கு மீண்டுள்ளது. இதனை முதல் எச்சரிக்கையாக சிரியா எடுத்துள்ளது.
இதுபோக சிரியாவை தாக்க அமெரிக்க அதிபர் டொனால் ரம், திட்டம் ஒன்றை வரைந்துள்ளதாக தெரியவருகிறது. இதில் பிரித்தானிய போர் விமானங்கள் பங்கேற்க்கும் எனவும் கூறப்படுகிறது. இன் நிலையில் சிரியாவுக்கு பெரும் ஆயுத உதவிகளை ரஷ்யா புரிந்து வருகிறது.
மேலும் நட்புறவு நாடாக ரஷ்யா இருந்து வருகிறது. சிரியாவை தாக்கினால் நிச்சயம் ரஷ்யா அதற்கு பதில் தாக்குதலை சிரிய மண்ணில் வைத்து நடத்தும். இது பெரும் உலகப் போரில் கொண்டு போய் விடலாம் என்ற அச்சம் ஆரம்பமாகியுளது.