எங்க வீட்டு மாப்பிள்ள நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் இருந்தே பல எதிர்விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. இதனால் நிகழ்ச்சி சர்ச்சையில் சிக்கி வருகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு ஜெய்ப்பூரில் முழுக்க முழுக்க படப்பிடிப்பு எடுக்கப்பட்டதாம். இறுதி கட்டத்தை நெருங்கும் வேளையில் இலங்கைக்கு ஆர்யா போட்டியாளர் சுஸானாவுடன் சென்றார்.
ஈழப்பிரச்சனை, பிரபாகரன், முள்ளிவாய்க்கால் தொடர்பாக பேசவே கூடாது என்ற நிபந்தனைகள் ஆர்யாவுக்கு விதிக்கப்பட்டது. அத்துடன் மாற்று உடையில் இராணுவத்தினரும் அனுப்பி வைக்கப்பட்டனர் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆர்யா விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பற்றி பேசிய சில காட்சிகள், எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டன என்று கூறப்படுகிறது.
அதனால் ஆர்யா சர்ச்சையில் சிக்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.