பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பதற்கான சட்ட மூலத்தில் மிகப்பெரிய குறைபாடுகள் காணப்படுவதாகக் கூறப்படு கின்றது. இதனை இறுதிப்போர் மற்றும் கடந்த கால விடயங்களுக் குப் பயன்படுத்த முடியாது என்பதால் தமிழர்கள் இந்தச் சட்ட மூலம் தமக்கு எந்த வகையிலும் பயனுள்ளதாக அமையாது என்றே நினைக்கின்றனர்.
இதேவேளை காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கென அமைக்கப்பட்ட அலுவலகத்துக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. ஐ. நா.மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் மிக அண்மையில் இடம்பெற்ற வேளையில் இந்த நியமனங்கள் இடம் பெற்றமை பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
ஜெனிவாவைச் சமாளிப்பதற்கான அரசின் ஏமாற்று வேலையே இதுவென காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். எங்கு தேடியும் காணாமல் போனவர்களைக் கண்டறிய முடியவில்லை யென அரச தலைவர் கைவிரித்துவிட்ட நிலையில், இந்த நியமனங்கள் தேவையற்றவை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றையெல்லாம் பார்க்கும் போது அரசின் கபடத்தனம் தௌிவாகப் புரிகின்றது.<