நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குநர் ஹரி இயக்கலாம் என செய்தி வலம் வர ஆரம்பித்துள்ளது.
தமிழ்த்திரை உலகம் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகிறது. ஆகவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் விஜய் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது.
முதலில் வேலை நிறுத்தம் தொடங்கப்பட்ட நிலையில் விஜய் படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. இந்தப் படத்திற்கு பின் ‘சதுரங்கவேட்டை’ வினோத் படத்தில் விஜய் நடிக்கலாம் என கூறப்பட்டது. அடுத்து அட்லியே இயக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் அந்தத் தகவல் எதையும் விஜய் தரப்பு உறுதி செய்யவில்லை.
இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குநர் ஹரி இயக்கலாம் என தகவல் பரவி வருகிறது. ஹரி தற்சமயம் சீயான் விக்ரமை வைத்து ‘சாமி ஸ்கொயர்’ படத்தை இயக்கி வருகிறார்.
அதன் ஃபர்ஸ்ட் லுக் உட்பட பல படங்கள் சமீபத்தில்தான் வெளியாகி இருந்தன. இந்தப் படத்தை முடித்த உடன் ஹரி விஜய்யை இயக்குவார் என தெரிய வந்துள்ளது. ஆனால் இது சம்பந்தமான அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை