Loading...
உடுதும்பர மருத்துவமனையில் சிகிச்சைக்கான சேர்க்கப்பட்டிருந்த மனைவிக்கு, கணவர், மனைவியின் வாயைப் பலவந்தமாக திறந்து நஞ்சை ஊற்றியுள்ளார் என்று ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட கணவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் ஹன்னஸ்கிரிய பிரதேசத்தில் நடந்துள்ளது.
Loading...
ஒரு பிள்ளையின் தந்தையான அஜித் குமார என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நஞ்சருந்திய மனைவி பேராதனை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நஞ்சு ஊற்றியமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...