விமானத்தில் கர்ப்பிணியாக இருந்த பெண்ணுடன் இன்னொரு பெண்ணுக்கு நட்பு ஏற்பட்ட நிலையில், குழந்தை பெற்றெடுத்த பெண் அதை தோழிக்கு தத்து கொடுத்துள்ளார்.
சமந்தா ஸ்னிப்ஸ் (24) என்ற பெண் இரு ஆண்டுகளுக்கு முன்னர் எட்டு மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில் விமானத்தில் பயணித்துள்ளார்.
அப்போது அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த டெம்பில் பிப்ஸ் என்ற பெண்ணுடன் சமந்தாவுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.
அப்போது தனக்கு விருப்பமில்லாத உறவால் குழந்தை வயிற்றில் உண்டாயிருப்பதாகவும், அந்த குழந்தையை வளர்க்க தனக்கு தகுதியில்லை எனவும் பிப்ஸிடம் சமந்தா கூறியுள்ளார்.
இதையடுத்து ஒருவருக்கொருவர் தங்கள் செல்போன் நம்பரை பறிமாறி கொண்டுள்ளனர். இது நடந்து சில நாட்களில் அழகான ஆண் குழந்தையை சமந்தா பெற்றெடுத்துள்ளார்.
பின்னர் குழந்தையை வந்து பார்க்குமாறு பிப்ஸுக்கு சமந்தா போன் செய்துள்ளார். குழந்தைக்கு வாவ்கின் என பெயர் வைக்கப்பட்ட நிலையில் அதை சென்று பிப்ஸ் பார்த்துள்ளார்.
இதன்பின்னர் தனியாக வசிக்கும் தனக்கு குழந்தையை தத்து கொடுக்க முடியுமா என பிப்ஸ் சமந்தாவிடம் கேட்க, இதே விடயத்தை உங்களிடம் நான் கேட்பதாக இருந்தேன் என சமந்தா மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
இதையடுத்து வாவ்கினை பிப்ஸ் தத்தடுத்து கொண்டார். தற்போது வாவ்கினுக்கு 2 வயதாகும் நிலையில் பிப்ஸிடம் மகிழ்ச்சியாக உள்ளான், அதே போல சமந்தாவும், பிப்ஸும் அடிக்கடி சந்தித்து கொண்டு தங்கள் நட்பை தொடர்ந்து வருகிறார்கள்.