காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு நேற்று தமிழகம் முழுவதும்
#GoBackModi ஹேஷ் டேக் உலகளவில் டிரெண்டானது.
#GoBackModi என்ற ஹேஷ் டேகில் வியாழக்கிழமை பிற்பகல் வரை மட்டும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான ட்வீட்டுகள் பதிவிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள தமிழர்களால் மட்டும் சாத்தியமில்லை. வட மாநில மக்களும், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பலரும் தமிழர்களின் இந்த போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
அமெரிக்கா, பிரிட்டன், சவுதி, ஜப்பான், கென்யா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களும், இது குறித்து ட்வீட் செய்து, இங்கு நடக்கும் போராட்டங்களுக்கு ஆதரவு தந்துள்ள
அதன் காரணத்தினாலேயே இது உலகளவில் டிரெண்டானது.
இந்த ஹேஷ் டேக் உலகளவில் ட்ரெண்ட் ஆகும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. விவசாயிகள் மட்டுமின்றி பிரதமர் மோடியால் சாமானிய மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதற்கான வெளிப்பாடுதான் இது.
இப்படியான எதிர்ப்பால், தற்போது பிரதமர் மோடிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும், தமிழக மக்களின் மீதான பயம் அவருக்கு அதிகரித்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்று கூறுகின்றனர் நெட்டிசன்கள்.