Loading...
பலரது கேள்விக் கணைகளுக்கு உள்ளாகிய ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான மார்க் ஸக்கர்பர்கை இப்போது இணையவாசிகள் கேலி செய்து வருகின்றனர்.
பிரிட்டனில் தளம் கொண்டுள்ள, அரசியல் ஆலோசனை நிறுவனமான Cambridge Analytica மேற்கொண்டதாகக் கூறப்படும் தகவல் ஊடுருவல் பற்றி, அமெரிக்க செனட் சபையிலும் மக்களவையிலும் அவர் சாட்சியமளித்தார்.
ஃபேஸ்புக்கைப் பாதுகாக்க சாட்சியமளிக்க வந்தாலும் சலிப்புத் தட்டும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியுள்ளதே என்பது போன்ற உணர்வு அவருடைய முகத்தில் பலமுறை நிழலாடியது.
Loading...
இதனைக் கண்ட இணையவாசிகள் அவரைக் கேலி செய்யத் தவறவில்லை.
அவர் செய்த ஒவ்வொரு செயலையும் உடனடியாக இணையத்தில் நகைச்சுவையான மீம்களாக (memes) அவர்கள் பதிவேற்றம் செய்தனர்.
Loading...