அழகு என்பது பெண்களுக்கு மட்டுமா சொந்தம். ஆண்களும் அவர்களின் முகத்தை பொலிவாக்க கண்டிப்பாக பேஷியல் செய்து கொள்ள வேண்டும்.
அழகு என்பது பெண்களுக்கு மட்டுமே சொந்தமா என்ன? இன்றைக்கு சந்தையில் ஆண்களுக்கான அழகு சாதனப்பொருட்கள் பல கிடைத்துவிடுகிறது. ஆண்களுக்காகவும் அவர்களின் முகத்தை பொலிவாக்கவும் பேஷியல் கண்டிப்பாக செய்து கொள்ள வேண்டும்.
ஆண்களுக்கு அதிகப்படியான டெஸ்ட்டோஸ்டிரோன் சுரப்பதால் எல்லாருக்குமே ஆயில் ஸ்கின் இருக்கும், அதிகமாக எண்ணெய் சுரக்கும் என்று சொல்ல முடியாது. அவரவர் சருமத்திற்கு ஏற்ப பேஷியல் செய்து கொள்ளலாம். ட்ரை ஸ்கின்னாக இருந்தால் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவிடும். ஆயில் ஸ்கின்னாக இருந்தால் அடிக்கடி பேஷியல் செய்து வர முகத்தில் எண்ணெய் வழிவது குறைந்திடும்.
பெண்களை விட ஆண்களுக்கு அதிகப்படியாக எண்ணெய் சுரக்கும். ஏனென்றால் அவர்களுக்கு சுரக்கும் டெஸ்ட்டோஸ்டிரோன் அளவு அதிகம். அதனை சரியாக சுத்தம் செய்யவில்லை என்றாலோ அல்லது முகத்தை முறையாக பராமரிக்கவில்லை என்றால் முகத்தில் கரும்புள்ளி, பரு போன்றவை வர ஆரம்பித்துவிடும். பேஷியல் என்பது உங்கள் முகத்தில் கெமிக்கல்களை கொட்டுவதல்ல, அதிக எண்ணெய்ப்பசையை நீக்குவதுடன் சரும துவாரங்களில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ளும்.
ஆண்களுக்கு அடிக்கடி ஷேவிங் செய்து சிலருக்கு கண்ணங்களில் அலர்ஜி அல்லது ரேஷஸ் ஏற்பட்டிருக்கும். அதிலேயே மேலும் மேலும் கெமிக்கல்கள் பூசி ஷேவிங் செய்திடும் போது முகத்தையே அகோரமாக்கிவிடும். முகத்தி பேஷியல் செய்திடும் போது முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதுடன் ரேஷஸ், அலர்ஜி போன்றவற்றிக்கு தீர்வாகவும் அமைந்திடும்.
முகத்தில் பரு வந்தாலோ அல்லது வேறு ஏதாவது ஏற்பட்டாலோ முகமே களையிழந்து போய்விடும். பேஷியல் செய்து கொள்வதால் இதனை தவிர்க்கலாம். பொதுவாக பல இடங்களுக்கும் சென்று வரும் ஆண்களுக்கு ஸ்ட்ரஸ் அதிகமாக இருக்கும். இந்த பேஷியல் என்பது உங்களுக்கு ஓர் ரிலாக்சேஷனாக இருக்கும்.