15-04-2018 ஞாயிற்றுக்கிழமை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், சித்திரை மாதம் 2ம் திகதி, ரஜப் 27ம் திகதி,
15.4.18 ஞாயிற்றுக்கிழமை தேய் பிறை, சதுர்த்தசி திதி காலை 8:34வரை
அதன் பின் அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம் நாளை அதிகாலை 4:29 வரை அதன்பின் அசுவினி நட்சத்திரம், அமிர்த,சித்தயோகம்.
* நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
* ராகு காலம் : மாலை 4:30-6:00 மணி
* எமகண்டம் : மதியம் 12:00-1:30 மணி
* குளிகை : மதியம் 3:00-4:30 மணி
* சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : பூரம்
பொது : சூரியன் வழிபாடு. சர்வ அமாவாசை.நதி கடல் நீராடல் சிறப்பு.
மேஷம்:
நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். வருமானம் உயரும். பணியாளர்கள் நிர்வாகத்தினரிடம் பாராட்டு வெகுமதி பெறுவர். குழந்தைகளின் செயல் மனதை மகிழ்விக்கும். ஆடை, ஆபரணம் சேரும்
ரிஷபம்:
பிறர் கூறும் குறைகளை கண்டு கொள்ள வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மூலதனம் அதிகம் தேவைப்படும். லாபம் மிதமாக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாக நேரிடலாம். நண்பர்களுடன் பொழுதுபோக்க வாய்ப்புண்டு.
மிதுனம்:
குடும்பத்தில் குழப்பம் உண்டாகி மறையும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சுமாராக இருக்கும். மிதமான வருமானம் கிடைக்கும். பெண்கள் நகை, பணத்தை கவனமாக கையாளவும். வீடு, வாகன வகையில் மராமத்துச் செலவு ஏற்படும்
கடகம்:
உற்சாக மனதுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இலக்கு எளிதில் பூத்தியாகும். பணப்பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெண்கள் விரும்பிய பொருள் வாங்குவர். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேறும்.
சிம்மம்:
குடும்பத்தில் வீண் விவாதத்தை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதலாக உழைப்பீர்கள். செலவில் சிக்கனம் தேவை. தெய்வ வழிபாடு மன அமைதிக்கு வழிவகுக்கும். உறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
கன்னி:
எதிர்பார்ப்பு இனிதே நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். பணவரவு படிப்படியாக அதிகரிக்கும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். . அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டாகும்.
துலாம்:
பிறரிடம் குடும்ப விஷயத்தை பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் விழிப்புடன் செயல்படவும். மிதமான லாபம் கிடைக்கும். ஒவ்வாத உணவுகளைத் தவிர்க்கவும். பெண்கள் பிள்ளைகளின் நலனுக்காகப் பாடுபடுவர்.
விருச்சிகம்:
எதிரியால் இருந்த தொல்லை விலகும். சமயோசித செயலால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள். தாராள பணவரவு இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் காட்டுவர். அரசு வகையில் நன்மையை எதிர்பார்க்கலாம்
தனுசு:
உறவினர் அதிக அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரம் செழித்து வளரும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகி்ழ்வர். உறவினர் வருகையால் சந்தோஷம் கூடும்.
மகரம்:
தகுதிக்கு மீறிய செயலில் ஈடுபட வேண்டாம். தொழில் வியாபாரத்தில் இலக்கு நிறைவேறும். வருமானம் திருப்தி தரும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு
கும்பம்:
புதியவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பணக்கடன் ஓரளவு அடைபடும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பிள்ளைகள் நற்செயலில் ஈடுபட்டு குடும்பத்திற்கு பெருமை சேர்ப்பர்.
மீனம்:
அறிவுத்திறனை வளர்த்துக் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான மாற்றம் செய்வீர். தாராள பணவரவு இருக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். பணியாளருக்கு விரும்பிய சலுகை கிடைக்கும்