நல்லாட்சி அரசாங்கம் தொடரும் எனவும் ஜனாதிபதியின் விருப்பின் படியே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி வருவதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
நேற்று (14) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.
கட்சியிலிருந்து விலகிய சிலர் உண்மையை மறந்த விதத்தில் விமர்ஷனங்களை முன்வைத்து வருகின்றனர். ஜனாதிபதி இவற்றுக் கொல்லாம் சிறந்த முறையில் விரைவில் பதிலளிப்பார் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதவி விலகிய 16 பேரும் ஸ்ரீ ல.சு.க. கட்டாயம் அரசாங்கத்திலிருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.