Loading...
தேசிய அரசாங்கத்துடன் தொடர்ந்தும் ஒட்டியிருப்பதா? இல்லையா? எனத் தீர்மானிக்கும் போது தங்களது சுயகௌரவம் குறித்தும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்தின் பயணம் தொடர்பில் தீர்மானம் எடுக்க நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் சரத் அமுனுகம தலைமையிலான குழு தொடர்பில் அண்மையில் இராஜினாமா செய்த 16 அமைச்சர்கள் குழுவின் அங்கத்தவரான சந்திம வீரக்கொடி எம்.பி.யிடம் வினவிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.
Loading...
தேசிய அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி விலக வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Loading...