இன்றைய நவீன உலகில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் போன் நிச்சயம் இருக்கும். அதிலும் குறிப்பாக இன்றை இளைஞர்கள் ஸ்மார்ட் போனிற்கு அடிமையாக உள்ளனர் என்றால் அது மிகையாகாது.
இந்நிலையில் ஸ்மார்ட்போனை அதிகமாக பயன்படுத்துவோருக்கு அதிகமான மன அழுத்தம் ஏற்படும் என்பது ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ மாகாண பல்கலை ஆராய்ச்சி பிரிவு மாணவர் எரிக் பெப்பர் தெரிவித்ததாவது: ஸ்மார்ட்போன் பயன்பாடு குறித்து 135 மாணவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் ஸ்மார்ட்போனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவோருக்கு தனிமை, கவலை, மனஅழுத்தம் ஆகிய உணர்வுகள் அதிகமான அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது
படிப்படியாக போதைப் பொருளுக்கு ஒருவர் எப்படி அடிமையாவாரோ அதேபான்றுதான் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாவதும். ஸ்மார்ட்போனை அதிகம் பயன்படுத்தும் வழக்கம் முதலில் மூளையில் உள்ள நரம்பு மண்டலங்களில் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கும். பின்னர் போதைப் பொருளால் உடல் கெடுவது போன்ற பாதிப்பை அது ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.