சிரியா இரசாயன தாக்கதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சிரியாவில் பிரிட்டன், பிரான்சுடன் இணைந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகின்றது.
சிரியாவில் அதிபர் பசர் அல் அஷாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஆயுதம் தாங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரச படைகள் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளை மீட்பதற்காக உச்சகட்ட தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன.
இதனடிப்படையில் அரச படைகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில் 80 ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் இத்தாக்குதலை அமெரிக்கா இரசாயன தாக்குதல் என குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால் இதற்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதனால் சிரியாவில் அமெரிக்கா நடத்தும் தாக்குதலை எதர்கொள்ள ரஷ்யாவை தயாராக இருக்குமாறு அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இதனடிப்படையில் ரஷ்யாவும் சிரியாவில் அமெரிக்கா தாக்குதலை கட்டுப்படுத்த தளங்களை அமைத்துள்ளது. இந்நிலையில் தற்போது சிரியா மீது பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுடன் இணைந்து அமெரிக்கா ஏவுகணை மூலம் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றது. இது குறித்து இன்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டமும் நடைபெறவுள்ளது.