Loading...
எல்ல – வெல்லவாய பிரதான வீதியின் எல்ல பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் தந்தையும், மகனும் உயிரிழந்துள்ளதுடன், தாய் படுங்காயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் நேற்யைதினம்(15.04.2018) மாலை 06.00 மணியளவில் சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Loading...
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தையுடைய எல்ல பகுதியை சேர்ந்த 38 வயதுடைய தந்தையும், 4 வயதுடைய மகனும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் கார் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து ஏற்பட்டதனாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Loading...