கிண்ணியா பகுதியில் உள்ள கடற்பரப்பில் தற்போது அதிகளவான சூறை மீன்கள் மீனவர்களால் பிடிக்கப்பட்டு வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
டிஸ்கோ வலை மூலமாக அதிக சூறை மீன்களை பிடிக்கப்படுவதாகவும் ஒரு கிலோவின் விலை தற்போது 150 ரூபாவாக சில்லறை விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சூறை மீன்களை அதிகளவான வெளியூர் உள்ளூர் வியாபாரிகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் கொள்வனவு செய்து வருவதுடன் வெளி மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.
இதனால் கிண்ணியாவில் இந்த தொழிலில் ஈடுபடுவோர்கள் அதிகளவாக மீன்களை பிடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்கள்.
இந்நிலையில் இது கிண்ணியாவின் கரையோரப் பகுதிகளான தோனா உப்பாறு கடற்கரையோரங்களில் இச் சூறை மீன்களை கொள்வனவு செய்யக் கூடியதாகவுள்ளது.
மொத்தமாக பிடிக்கப்படும் சூறை மீன்களை மீன் வாடிகள் மூலமாக மொத்த விற்பனையிலும் வெளி மாவட்ட வியாபாரிகளுக்கு அதிகளவாக விற்பனையில் ஈடுபட்டு வருவதனை அவதாரிக்க முடிகிறது .
இச்சூறை மீன்கள் காலத்துக்கு காலம் குறிப்பிட்ட காலப் பகுதிகளில் வழமையாக பிடிக்கப்படுவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் இம் முறை சூறை மீன்களின் அதிக வரவினால் மீனவர்களுக்கு வருமானமும் கிடைக்கப் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது