மாங்குளம், நீதிபுரம் பகுதியில் 12 வயது பாடசாலை மாணவன் ஒருவன் ஒரு கால்களும் முறிந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
கோ.இசைப்பிரியன் என்ற மாணவனே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில், குறித்த மாணவனான சிறுவன் கடந்த சில நாட்களா வீட்டிற்கு வராமல் உறவினர் வீட்டில் தங்கிவிட்டு நேற்று (15) காலை வீட்டிற்கு சென்றபோது அவனது தந்தையின் தாக்குதலில் காயமடைந்த நிலையில் தாயாரால் வைத்தியசாலையில் சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான்.
பின்னர் மேவதிக சிகிச்சைகளுக்காக சிறுவன் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக” குறிப்பிட்டனர்.
சிறுவனின் இரு கால்களும் முறிந்து, கை, முகம், முதுகு பகுதிகளில் பாலத்த காயங்களுடன் காணப்படுவதாக வைத்தியசாலை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுவனின் தந்தை முன்னரும் மகளை தாக்கியதால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.