சிரியாவில் பதிலடி கொடுக்க ரஷ்யா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிரியா அதிபர் பசர் அல் ஆஷாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஆயதம் தாங்கி போராடி வருகின்றனர். இதனால் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதிகளை மீட்பதற்காக சிரியா அரச படைகளும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் சிரியா அரச படைகள் நடத்திய தாக்குதலில் 80 ற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதுடன் பலர் காயம் அடைந்துள்ளனர்.
இது குறித்து நடந்த ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், அமெரிக்கா சிரியாவில் நடந்தது இரசாயன தாக்குதல் என குற்றஞ்சாட்டி, சிரியாவை விசாரணைக்கு அழைக்குமாறு தெரிவித்துள்ளது. ஆனால் இதனை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்துள்ளது. இதனால் ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே கருத்து முரண்பாடு நடந்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவில் அமெரிக்கா நடத்தும் தாக்குதலுக்கு, ரஷ்யா தயாராக இருக்குமாறு அமெரிக்கா அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2 தினங்களால் ரஷ்யாவில் பிரிட்டன் மற்றும் பிரான்சுடன் இணைந்து, அமெரிக்கா தாக்குதலை நடத்தி வருகின்றது. இதனால் பதிலடி கொடுப்பதற்காக, ரஷ்யா சிரியாவில் தொடர்ந்து ஆயுதங்களை குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது