செரிபரல் பால்சி லங்கா பவுண்டேசனினால் செரிபரல் பால்சி குழந்தைகளுக்கான விஷேட சக்கர நாற்கலி இலவசமாக வழங்கும் நிகழ்வு கிரான் கும்புறுமூலையில் நேற்று(15-04-2018) மாலை இடம்பெற்றது.
எம்.ஜே.எப். சமூக அமைப்பின் தவிசாளர் வைத்தியர் கோபி கிட்ணசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஒரு வயது தொடக்கம் 19 வயது வரையான செரிபரல் பால்சி குழந்தைகள் கலந்து கொண்டனர்.
செரிபரல் பால்சி லங்கா பவுண்டேசனின் (எம்.ஜே.எப்.) கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கிரான் கும்புறுமூலையில் அமைந்துள்ள கிளையில் நடைபெற்ற நிகழ்வில் நூறு பேருக்கு சக்கர நாற்கலி இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு கலந்து கொண்ட ஒரு வயது தொடக்கம் 19 வயது வரையான செரிபரல் பால்சி குழந்தைகளுக்கு வைத்தியர்களினால் சிகிச்சைகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இதற்காக செரிபரல் பால்சி லங்கா பவுண்டேசன், எம்.ஜே.எப். சமூக அமைப்பு, வேல்ட் விஷன், எரவுண்ட் த பேர்ல் ஆகிய அமைப்புக்கள் அனுசரணையினை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.