வலி வடக்கு பிரதேச சபையின் உறுப்பினரும், இளைஞர் சேவை உத்தியோகத்தரும் ஆகிய சொக்கலிங்கம் சபேசன் அவர்களின் ஏற்பாட்டில், தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனுடனான சந்திப்பு நேற்று நடைபெற்றுள்ளது.
வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினர் சபேசன் ஏற்பாட்டில் ஜெற் விங் ஹொட்டலில் இக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. இக் கலந்துரையாடலில் உடற்கல்வி டிப்ளோமா சங்க தலைவர், உபதலைவர், செயலாளர், சங்க பிரதிநிதிகள் மற்றும் வலிகாமம் உதை பந்தாட்ட லீக் தலைவர் மற்றும் இளைஞர் சேவை அதிகாரியுமான யுகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனடிப்படையில் அமைச்சர் மனோகணேசனுடனான சந்திப்பில், வடமாகாண உடற்கல்வி ஆசிரியர் நிஜமனம் குறித்த பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு குறுகிய காலத்தில் முடிவுகள் வழங்குவதாக மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து யாழ் மாவட்ட இளைஞர், யுவதிகள் வெளிமாவட்டங்களுக்கு செல்கையில், ஏற்படும் மொழி பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், இதற்கு உடனடியாக யாழில் 15 பிரதேச செயலக பிரிவிலும், சிங்கள கற்கை நெறி ஆரம்பிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் யாழ் மாவட்டத்தில் வேலை அற்று காணப்படும் இளைஞர் யுவதிகள் தொடர்பாகவும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு, பிரதேச செயலகங்கள் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள, வரும் காலங்களில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளதாக, வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினரும் இளைஞர் சேவை அதிகாரியுமான சபேசன் தெரிவித்துள்ளார்