Loading...
உடல் எடையைக் குறைக்க,நம்மில் பலர், உடற்பயிற்சியை மேற்கொள்வோம்.
ஆனால் உடற்பயிற்சி உடல் எடையைக் குறைப்பதற்கு முக்கியப் பங்காற்றவில்லை என அண்மைய ஆய்வு தெரிவிக்கிறது.
அமெரிக்க நீரிழிவுச் சங்கத்தின் Diabetes சஞ்சிகையில் அந்த ஆய்வு வெளியிடப்பட்டது.
Loading...
உடற்பயிற்சி, எடைக் குறைப்பு ஆகியவற்றைக் குறித்து மனிதர்கள் மட்டுமன்றி விலங்குகளிடமும் ஆய்வு நடத்தப்பட்டது. எடையைக் குறைக்க உடற்பயிற்சி சிறந்த வழியாக இருக்காது என அதன் முடிவில் தெரியவந்தது.
ஆய்வில் பங்கேற்றோர் உடற்பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டனர். உடற்பயிற்சி மூலம் இழக்கும் கலோரிகளுக்கேற்ப குறையவேண்டிய எடை மதிப்பிடப்பட்டது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததைவிட குறைவான எடையை இழந்தனர்.
Loading...