கண்டி- கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் விபத்துக்கு உள்ளான முஸ்லிம் நபர் ஒருவர் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அங்கு அவரை பார்க்க வந்த பிரதேச நபர் ஒருவர் அனுமதி கேட்டுள்ளார். இரவு வேளை என்பதாலும், குறிப்பிட்ட நபர் போதையிலும் இருந்ததை அடுத்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அங்கிருந்து வெளியேறிய நபர் அவரின் நண்பர்கள் சிலரை ( முஸ்லிம் – சிங்களம்) அழைத்து வந்து உத்தியோகத்தர்களை தாக்க முற்பட்டதுடன் வைத்தியசாலையின் தளபாடங்களை தாக்கி உள்ளனர்.
இதனால் அங்கு அசாதாரன நிலை ஏற்பட்டுள்ளனது. தாக்கியவர்கள் திரும்பி சென்றவுடன் பொலீசுக்கு தகவல் தெரிவிக்கபட்டு உத்தியோகத்தர்கள் வேலை நிறுத்த ஆர்பாட்டம் செய்ய முனைந்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டதால் ஆர்பட்டம் ( மடவளை நியூஸ்) தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
திகன சம்பவம் உற்பட பல சம்பவங்கள் போதை ஆசாமிகளால் தொடர்ந்து இடம்பெற்று சமூக பிரச்சினையாக மாறி வருவது கவலைக்குறியது.