கோபப்படுவார்கள், அன்பாக இருப்பார்கள், மென்மையானவர்கள் என ஜோதிடப்படி சில ராசிக்காரர்களுக்கு அடிப்படை குணம் என்ற ஒன்று இருக்கும்.
அப்படி, அனைவரையும் எளிதில் நம்பி ஏமாந்துபோகும் ராசிக்காரர்கள் இதோ,
மீனம்
மீன ராசிக்காரர்கள் மற்றவர்களால் அதிகம் புண்படுவதோடு, இனிமேல் தன்னைப் புண்படுத்தியவர்களுடன் பழக்கம் வைத்துக் கொள்ளக்கூடாது என்று தங்களுக்கு தாங்களே உறுதிமொழி எடுத்துக் கொண்டாலும், எல்லாவற்றையும் விரைவில் மறந்து மீண்டும் தன்னைப் புண்படுத்தியவர்களை மன்னித்து, அவர்களது நல்ல குணத்தை மட்டும் மனதில் கொண்டு அவர்களை நம்பி மீண்டும் ஏமாறுவார்கள்.
துலாம்
துலாம் துலாம் ராசிக்காரர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள் மற்றும் நம்பகத்தன்மை கொண்டவர்கள். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது குறித்து சற்று குழப்பத்துடனேயே இருப்பார்கள்.
இந்த ராசிக்காரர்கள் எப்போதும் மற்றவர்களால் ஏமாற்றப்படுவது போன்று தோன்றினால், அதற்கான காரணம் என்னவென்று அலசி ஆராய்வார்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் காதலித்து ஏமாற்றம் அடைவார்கள். இவர்களைச் சுற்றி இருப்பவர்கள் இவர்களை எவ்வளவு தான் எச்சரித்தாலும், இந்த ராசிக்காரர்கள் காதலின் மீது நம்பிக்கை கொண்டு விழ விரும்புவார்கள். இந்த ராசிக்காரர்கள் ஒருவரைக் காதலிக்கும் போது, இவர்களது ஆழ்மனம் சொல்வதைக் கேட்காமல் கண்மூடித்தனமாக காதலிப்பவரை நம்பி, நாளடைவில் காதல் தோல்வியால் கஷ்டப்படுவார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் புத்திசாலி மற்றும் மிகவும் அப்பாவியாக காட்சியளிப்பர். இந்த ராசிக்காரங்கள் தங்களைச் சுற்றி இருப்பவர்கள் நட்புடன் பழக வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். ஆனால் இப்படி இவர்கள் நினைப்பது சரியானது அல்ல. மறுபுறம், இந்த ராசிக்காரர்கள் எங்கேனும் பயணத்தை மேற்கொண்டால், தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் மற்றும் பார்க்கும் அனைவரையும் பாவம் என்று நினைத்துக் கொள்ளக்கூடாது.
கடகம்
வாழ்க்கையில் உள்ள பல விடயங்களால், இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களால் நாசூக்காக அடக்கி ஆளப்படுவார்கள். இந்த ராசிக்காரர்கள் மோசமான காதல் முறிவையோ அல்லது தீவிரமான வாக்குவாதத்தினால் பிரியும் போது தான், இந்த ராசிக்காரர்கள் இதற்கு தனது அளவுக்கு அதிகமான நம்பிக்கையே காரணம் என்று உணர்வார்கள்.