துருணு சிரமசக்கி ’’ திறமைமிக்க இளைஞர் தேசிய விருதில் மாவட்ட ரீதியில் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.
தேசிய இளைஞர் சேவை மன்றத்தினரால் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட கிராமத்திற்கு ஒருகோடி மக்கள் கருத்திட்ட மதிப்பீட்டில் ( ‘‘ துருணு சிரமசக்கி ’’ ) சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் சுதுமலை வடக்கு இளைஞர் கழகம் இளைஞர் மையத்தை நிறுவி மாவட்ட ரீதியில் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டது.
அலரி மாளிகையில் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற தேசிய விருது வழங்கும் நிகழ்வில் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் உ. யசோதா அவர்களுக்கு வெற்றிக் கேடயமும் சுதுமலை வடக்கு இளைஞர் கழகத்திற்கு 5 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலையும் இந்த நிகழ்வை நெறிப்படுத்தியமைக்காக இளைஞர் சேவை அதிகாரி லோகநாதன். றஜீபனுக்கு சான்றிதழும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.