உத்திரப்பிரதேசம் அலகாபாத் பகுதியில், சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர், மணமகள் வீட்டிற்கு சைக்கிளில் சென்ற நிகழ்ச்சி அப்பகுதியில் பெரும் பாராட்டை பெற்றது.
அலகாபாத் பகுதியில் வசித்துவருபவர் ஜவேந்திர குமார். அவருக்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது.
திருமண நிகழ்ச்சியின் போது, மணமகள் வீட்டிற்கு, மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் சிலர், சைக்கிளில் சென்றனர்.
சுற்றுசூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற வித்தியாசமான செயலில் ஈடுபட்ட ஜவேந்திர குமாரை, அப்பகுதியினர் பாராட்டி வருகின்றனர்.
இவரின் இதுபோன்ற செயலுக்கு காரணம், சுற்றுசூழல் ஆர்வலரான அஜய் க்ராந்திகாரி. இதுபோன்ற வித்தியாசமான முயற்சியில் ஈடுபட மணமகனையும் அவரது குடும்பத்தினரையும் சம்மதிக்கவைக்க 15 நாட்கள் தேவைப்பட்டது என்று குறிப்பிட்ட அவர், அருகிலுள்ள இடத்திற்கு செல்வதற்கு சைக்கிளை பயன்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், காற்று மாசை கட்டுப்படுத்த நம்மால் இயன்ற அளவு முயற்சிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.