Loading...
இலங்கையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் முச்சக்கர வண்டிகளுக்கான மீற்றர் மானி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலை வீதி பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட விடுத்துள்ளார்.
கடந்த 1ம் திகதி முதல் இந்த நடைமுறை கட்டாயப்படுத்தப்பட்டிருந்த போதிலும், சாரதிகள் உள்ளிட்ட தரப்புக்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, இந்தக் கால எல்லை நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Loading...
பிரயாணிகளின் பாதுகாப்பையும், முச்சக்கர வண்டிகளின் சேவையையும் உறுதிப்படுத்தும் நோக்கத்திலேயே இது அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக வீதி பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட குறிப்பிட்டுள்ளார்.
Loading...