தொடுதல் ஸ்பரிசம் என்பது உலகின் உன்னதங்களாக உறவுகளிடம் ஒரு மேம்பட்ட நெருக்கத்தை தரும் வகையில் பார்க்கப்பட்டது பிறந்த குழந்தையை தாய் தொடுதல், போன்றன அவை .
தொடுதல் இல்லாமல் எந்த உறவுகளும் சிறப்பானதாக இருந்துவிடவும் முடியாது என்பதென்னவோ உண்மைதான்.
.தீக்குள் விரலை வைத்தால் உன்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா என அந்த தீண்டலின் ஆத்மார்த்த உணர்வை வார்த்தைகளில் வடித்தான் பாரதி,
ஆனால் இன்று நாம் பேசபோகும் தொடுதல்.. தீயை நம் மீது கொட்டி பற்றி எரிய வைத்து விடுமளவுக்கு இருக்கிறது.
ஆம்
நாளாந்த வாழ்வியலில் நாம் பார்க்கும் மோசமான சமூக அவல சம்பவங்களில் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் பெண்கள் இதற்கு அதிகம் முகம் கொடுக்க வேண்டிய உள்ளதுதான் கொடுமை என்றால்
சமகாலத்தில் நிகழும் குழந்தைகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் இந்த கோர பாலியல் துஷ்பிரயோகங்களினை ,அந்த பிஞ்சுகள் உணர்ந்து கொள்வதற்கு முன்னரே அவர்கள் கசங்கிய பூக்களாய் உயிரை உதிர்த்துவிடுகிறார்கள் எனும் வலி மிகு உண்மை கொடுமையின் உச்சமாக இருக்கிறது
.சட்டத்தை எவ்வளவுதான் கடுமையாக்கிய போதிலும் சிறுவர்,சிறுமியர் மீதான துஷ்பிரயோகங்களைத் தடுக்க முடியாதிருக்கிறது.
இந்த கொடுமைகளில் இருந்து விடுபட குடும்பத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய ,பெரியவர்கள் ,குழந்தைகளுக்கு கற்றுதரவெண்டிய முக்கிய விடையங்களில்…
இந்த சரியான தொடுதல் தவறான தொடுதலை குழந்தைகள் புரிந்து கொள்ளவேண்டும். ஒருவர் தன்னை எத்தகைய நோக்கத்துடன் தொட்டுப் பேசுகிறார் என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர் புரிய வைப்பது அவசியம் என்பதனை அடிப்படையாக வைத்து
குழந்தைகளுக்கு பெற்றோர் புரிய வைக்க வேண்டிய விடயங்கலைப் பார்க்கலாம்
உடலானது குழந்தைக்கு மட்டும் தான் சொந்தம் அதனை பெற்றவர்கள் குழந்தைக்கு புரியவைக்க வேண்டும் .
எந்த உடல் அவயவங்கள் எல்லாம் உள்ளாடைகளால் மறைக்கப்படுகிறதோ அவை அந்தக் குழந்தையின் தனிப்பட்ட உருப்புக்கள். உடல் ஆரோக்கியத்திற்காக தவிர வேறு காரணங்களுக்காக மற்றவர்கள் அவற்றை தொடுவதோ, பார்ப்பதோ, அவைகளை பற்றி பேசுவதோ குழந்தை அனுமதித்தால் அது ஆபத்து என சொல்லிக் கொடுங்கள்.
மனதுக்கு பிடித்தவர்கள் கட்டிப்பிடித்தோ, முத்தம் கொடுத்தோ அன்பை வெளிப்படுத்துவார்கள்.அது பெற்றோர்கள் முன்னிலையில் இருக்கவேண்டும். அதைவிடுத்து இரகசியமாக செய்தால் உடனே அதனை பெற்றோரிடம் தயங்காமல் சொல்லவேண்டும் என்பதையும் பெற்றோர் தவிர வேறு யாரையும் அனுமதிக்கக் கூடாது என்பதையும் சொல்லிக் கொடுங்கள்
பரிசு பணம் இனிப்பு சாக்லேட் போன்றவற்றைக் கொடுத்து தமது சொல் படி நடக்க வைக்க சிலர் முயல்வார்கள் இதுவும் பல விபரீத பிரச்சனைக்கு ஆட்படுத்தும் எனவே தெரியாதவர்கள் கொடுக்கும் எதையும் குழந்தைகள் வாங்கக் கூடாது என சொல்லி வளர்க்கவும்
யாராவது ரகசிய தொடுதல் செய்தாலோ அல்லது அதனை யாரிடமும் சொல்ல வேண்டம் என்று சொன்னலோ குழந்தைகள் பெற்றோரிடம் சொல்ல வேண்டும் என குழந்தைக்கு பக்குவமாக புரியவையுங்கள்
மேலும்
யாராவது தவறான எண்ணத்தில் தொட்டுப் பேசினால் சத்தமாக இப்படி செய்யாதீர்கள் என சொல்லவேண்டும் என குழந்தைக்ளுக்கு சொல்லிக் கொடுங்கள் .
ஆம் பெற்றவர்களே இது உங்கள் குழந்தைகள் தங்களை தற்காத்துக்கொள்ள நிச்சயம் உதவும்
பாதகம் செய்பவரைக் கண்டால் பயங்கொள்ளல் ஆகாது பாப்பா மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்திவிடு பாப்பா என அந்த தீர்க்க தரிசி முண்டாசுக் கவிஞன் வரிகள் நிச்சயம் இந்த சமுதாய பிரழ்வுக்கு தீர்வாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.