இலங்கையின் கிழக்கே, திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நடு ஊற்று கிராமத்தில் சுனாமி வீட்டுத் திட்டப் பகுதியில் பெண்ணொருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
கேரள கஞ்சாவை தூளாக அரைத்துக் கொண்டிருந்த நிலையிலேயே குறித்த பெண் இன்று (19) வியாழக்கிழமை, திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
34 வயதுடைய குடும்பப் பெண்ணான இவரிடமிருந்து 20 கிராம் கேரள கஞ்சா தூள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகலையடுத்து மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.