இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் மீன்களை நியாய விலையில் விற்பனை செய்ததால் சந்தையில் மீன் விலை ஸ்திரமட்டத்தை எட்டியதாக கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சரும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
முன்னைய ஆண்டுகளில் பண்டிகைக் காலம் பார்த்து வர்த்தகர்கள் மீனவர்கள் மீன் விலையை உயர்த்தினார்கள்.
இதனால் நுகர்வோர் சிரமப்பட நேர்ந்தது. இதனை கருத்திற் கொண்டு இம்முறை மீன் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இம்முறை ஆகக் கூடுதலாக நுகரப்படும் நான்கு வகை மீன்களை குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் காரணமாக கடற்றொழில் கூட்டுத்தாபனமும் கூடுதல் வருவாயை பெற முடிந்தது என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.