2014 ஆம் ஆண்டு ஹிந்தியில் கங்கனா ரணாவத் நடித்த குயின் படம் மிக பெரிய ஹிட் அடித்து பல விருதுகளை பெற்றது. அந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ரீ மேக் செய்கிறார்கள். இந்த படத்தின் தெலுங்கில் தமன்னாவும், தமிழில் காஜல் அகர்வாலும், மலையாளத்தில் மஞ்சிமா மோகனும் நடிக்கிறார்கள். மேலும், தமிழ், கன்னடப் படங்களை ரமேஷ் அரவிந்த் இயக்க, தெலுங்கு படத்தை நீலகண்டா இயக்க இப்படங்களின் படப்பிடிப்பு ஆரம்பமானது.
ஹிந்தி கதையிலிருந்து சில மாற்றங்களை தெலுங்கு படத்தில் இயக்குனர் செய்திருக்கிறார் என்றும், அதனால் இயக்குனருக்கும் தமன்னாவிற்கும் எதோ மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இதற்காக தமன்னா சரியாக படப்பிடிப்பிற்கு செல்வதில்லை என்றும் செய்திகள் வெளியானது.
அதைத்தொடர்ந்து, திடிரென்று தெலுங்கு, மலையாளப் படங்களை இயக்கி வந்த நீலகண்டா, தெலுங்கு, மலையாள மொழிப் படத்தை இயக்குவதை விட்டு விலகிவிட்டதால் இந்த படங்களை ரமேஷ் அரவிந்த் தான் இயக்கப்போகிறாராம். ஆனால் தற்காலிகமாக படத்தை நிறுத்தி வைத்துவிட்டு தமிழ், கன்னட படம் முடிந்ததும் மற்ற மொழி படங்களை இயக்கப் போகிறாராம் இயக்குனர் ரமேஷ் அரவிந்த். இதனால் தற்காலிகமாக தமன்னாவின் படப்பிடிப்பு நின்றுவிட்டது.