ஒரு பெண்ணைப் பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தால் அந்தப் பெண்ணை பார்த்த பின்பு திருமணம் செய்து கொள்ளுங்கள்.
ஒருவர் அண்ணலார் நபிகள்நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்து, தனக்கு திருமணம் நடக்க இருப்பதாக சொல்லவும், “”மணப்பெண்ணை பார்த்து விட்டாயா?” என்று கேட்டார்கள்.
அவர் “”இல்லை” என்று கூறினார்.
“”முதலில் பெண்ணைப் பார். இதுதான் உங்களிடையே அன்பை ஏற்படுத்தும்,” என்று அண்ணலார் அவர்கள் கூறினார்கள்.
“”கட்டாயப்படுத்தி ஒரு பெண்ணை ஒருவருக்கு திருமணம் செய்விக்க மார்க்கத்தில் அனுமதியுண்டா?” என்று ஒரு பெண், அண்ணலாரிடம் கேட்டார்.
“”உனக்கு பிரியமில்லாதவரை நீ திருமணம் செய்யாதே,” என அவர்கள் பதிலளித்தார்கள்.
விதவைப் பெண்ணிடம் ஒப்புதல் பெறும் வரையிலும், கன்னிப்பெண்ணிடம் அனுமதி பெறும் வரையிலும் திருமணம் செய்து வைக்கப்படாது.
கன்னிப்பெண்ணிடம் எவ்வாறு அனுமதி பெறுவது என்ற கேள்விக்கு நாயகம்(ஸல்) அவர்கள், “”அவளுடைய மவுனமே அனுமதியாகும்,” என்று பதிலளித்தார்கள்.
இதன்படி பெண்ணைப் பார்த்தபிறகு திருமணம் செய்து, அன்புடன் வாழுங்கள். இனிய இல்லறத்தை நடத்துங்கள்.