இலங்கையின் வடமத்திய மாகாணம் மதவாச்சி, கரம்பன்குளம் பிரதேசத்தில் இன்று அதிகாலை சிற்றூந்து மற்றும் உந்துருளி ஆகியன ஒன்றுடன் ஒன்று மோதியதால் இருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உந்துருளியில் பயணித்த கணவர் மற்றும் மனைவி ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள், மதவாச்சி, கல்கதந்தகம பிரதேசத்தினைச் சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். சம்பவத்தில் பலியாகிய பெண்ணின் வயது 21 என்பதுடன், ஆணின் வயது 25 என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை விபத்தில் சம்மந்தப்பட்ட மற்றொரு வாகனமான சிற்றுந்தின் சாரதி, படுகாயமடைந்து மதவாச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.