Loading...
கொழும்பு பொறளையில் அமைந்துள்ள சிறுவர்களுக்கான வைத்தியசாலை வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து இன்று சனிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் விரைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
Loading...
மின் ஒழுக்கே இந்த தீ விபத்துக்கான காரணம் என்று ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும் இந்த விபத்து காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்ற சிறுவர்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Loading...