கடந்த 1 மாதத்துக்கும் மேலாக கோலிவுட்டில் புதிய படங்களின் படப்பிடிப்பு நடக்காமல் வேலை நிறுத்தம் காரணமாக சில ஹீரோ, ஹீரோயின்கள் காலத்தை வீணடிக்காமல் வெளிநாடு சுற்றுலா சென்றனர்.
அந்தவகையில் நடிகை திரிஷா அமெரிக்கா புறப்பட்டு சென்று சுமார் 2 வாரம் தோழிகளுடன் ஊர் சுற்றி பொழுதை கழித்தார்.
நியூயார்க் உள்ளிட்ட சில நகரங்களில் சுற்றி வந்தவர், சமீபத்தில் சென்னை திரும்பினார். நெருக்கமான தோழிகள் அவரை சந்தித்தனர். அவர்களுடன் நின்றபடி புகைப்படம் எடுத்த திரிஷா, அதை தனது இணைய தள டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
கிழித்து தைத்த அல்லது தரையில் பலமாதம் தேய்த்ததுபோன்ற ஜீன்ஸ் பேண்ட் அணிவது இளவட்டங்களின் நாகரீக மாக உள்ளது. அதுபோன்ற ஒரு ஜீன்ஸ் பேண்ட் அணிந்து தோழிகளுடன் திரிஷா போஸ் அளித்திருந் தார்.
தொடையிலிருந்து முட்டிக்கால்வரை கிழிந்து நூல் நூலாக தொங்கும் ஜீன்ஸ் பேண்ட்டை திரிஷா அணிந்திருந் ததே ரசிகர்களின் கலாய்ச்சலுக்கு காரணம்.
ஆனால் அதுபற்றி திரிஷா கண்டுகொள்ளவில்லை. சிறுமி ஆஷிபா பாலியல் பலாத்கார சம்பவத்துக்கு நீதி கேட்டு டுவிட்டரில் மெசேஜ் வெளியிட்டதுடன், விஜய்யுடன் தான் நடித்த ‘கில்லி’ படம் திரைக்கு வந்து நேற்றுடன் 14 வருடம் ஆனதை நினைவு கூறும் வகையில் தகவல் பகிர்ந்துகொண்டிருக் கிறார் திரிஷா