நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் சில இன்றிரவு முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால், 8 மாவட்டங்களிலுள்ள மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
புத்தளம் தொடக்கம் நீர்கொழும்பு, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பிராந்தியங்களில் உள்ள கடல்சார் ஊழியர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் கேட்டுக்கொண்டார்.
கடல் அலை சுமார் 2.5 தொடக்கம் 3.5 மீற்றருக்கு உயரக்கூடும் என வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் குறிப்பிட்டார்.
புத்தளம் தொடக்கம் கொழும்பு ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் எனவும் இடர் முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
அனர்த்தங்கள் ஏற்படுமாயின் உடனடியாக 117 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.