சீனாவின் குய்லின் பகுதியில் உள்ள தாவோஹுவாஜியாங் ஆற்றில் இரண்டு படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பரிதாபமாக பலியாகினர்.
குறித்த ஆற்றில் அவ்வப்போது படகு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். படகு போட்டிகள் நடாத்துவது எனில் பொலிசாரிடம் அனுமதி பெற வேண்டும்.
இந்நிலையில் படகு போட்டி நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், பொலிசாருக்கு எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இதனையடுத்து போட்டிக்கு தயாராகி கொண்டிருந்த போது பயிற்சி ஓட்டம் நடைபெற்றுள்ளது.
அப்போது திடீரென ஏற்பட்ட விபத்தில் இரண்டு படகுகள் ஆற்றில் மூழ்கின. இதில் இரண்டு படகுகளிலும் பயணம் செய்த அனைவரும் ஆற்றில் மூழ்கினர்.
ஆற்றில் மூழ்கியவர்களை மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் சுமார் 40 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோர விபத்தில் 17 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.