பிரபல தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி நடிகையான பூமிகாவின் சமிப கால புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.
பூமிகாவுக்கும் யோகா பயிற்சியாளர் பரத் தாகூருக்கும் கடந்த 2007 இல் திருமணம் நடந்தது.
பல வருடங்களுக்கு பிறகு பூமிகாவுக்கு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. குடும்ப வாழ்வில் இணைந்து விட்டதால் நடிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டார்.
இந்த நிலையில் பூமிகா தனது அழகிய குழந்தையுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். முன்பு இருந்ததை விடவும் சற்று உடல் பருமன் அதிகரித்து விட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
அது மட்டும் இல்லை, பூமிகா பற்றிய பரபரப்பு தகவல் ஒன்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தது.
பட தயாரிப்பில் ஈடுபட்டு நஷ்டம் அடைந்துள்ளதாகவும், அதனை சமாளிக்கவே மீண்டும் நடிப்பதாகவும் தகவல் பரவியது.
எனினும், பைனான்ஸ் பிரச்சினையால் நான் மீண்டும் நடிக்க வந்திருக்கிறேன் என்பது உண்மை இல்லை. அது பொய்யான தகவல் என்பதை ஊடகங்கள் மூலம் தெரிய படுத்தியிருந்தார்.