ஐ.பி.எல் தொடரின் 19வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்த்து ஆடிய பெங்களூரு அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
39 பந்துகளில் 90 ஓட்டங்கள் குவித்த பெங்களூரு அணி வீரர் டிவில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்நிலையில் வெற்றிக்கு பின் பேசிய விராட் கோஹ்லி கூறுகையில், ‘நாங்கள் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலும் இன்னும் சில ஏரியாவில் சரியாக விளையாட வேண்டியிருக்கிறது.
இந்தப் போட்டியில் நான் எடுத்த 30 ஓட்டங்கள், கடந்தப் போட்டியில் எடுத்த 90 ஓட்டங்களை விட சிறப்பானது. புத்திசாலித்தனமான டிவில்லியர்ஸ் அணியில் இருக்கும்போது, அவர் எப்போதும் உங்களை புன்னகைக்க வைத்துக்கொண்டே இருப்பார்.
60-70 ஓட்டங்கள் வரை Partnership நன்றாக இருந்தால் இந்தப் போட்டியை வெல்லலாம் என நினைத்தோம். ஆனால், கடைசிவரை என்னால் நிற்க முடியவில்லை. நான் அடித்த பந்தை எல்லைக்கோடு அருகே நின்று போல்ட் பிடித்தார்.
அதைக் கண்டு அதிர்ந்துவிட்டேன். மிகவும் அருமையான கேட்ச் அது. ஐ.பி.எல்-யில் மட்டும்தான் இதுபோன்ற கேட்சுகளை Special ஆக பார்க்க முடியும். அதைப் பார்க்க சிறப்பாக இருந்தது.
இப்படியான ஒரு கேட்ச் மூலம் அவுட் ஆவதால் வருத்தம் வராது. ரசிகர்கள் எங்களுக்குத் தொடர்ந்து, ஆதரவளித்து வருகிறார்கள். அவர்கள் எங்களை நம்புகிறார்கள். அதைக் காப்பாற்றுவோம் என தெரிவித்துள்ளார்.